அன்று இரவு படப்பிடிப்பு படபடப்பாக நடந்துக்கொண்டிருந்தது, காட்சிப்படி ஹீரோ, அந்த வீட்டை சுற்றி சில Electro Magnetic Field அளவுகள் எடுக்க வேண்டும். அதற்காக சிலர் வீட்டிற்குள்ளேயும் பலர் வீட்டிற்கு வெளியேயும் ஃபீல்டில் இல்லாதவாறு நின்றுகொண்டிருந்தோம். ஷாட் முடிந்ததும் சதீஷ்(கேமராமேன்) வாக்கிடாக்கியில் சிக்னல் கொடுப்பார்நானும்(ஹரீஷ் நாராயண்) கிருஷ்ண சேகர் சாரும் வெளியே வாக்கி டாக்கியுடன் வெயிட் செய்து கொண்டிருந்தோம். ஆனால் வெகு நேரம் ஆகியும் எந்த ஓரு மெஸேஜும் வராததால், நாங்கள் உள்ளே சென்று என்ன என்று பார்த்தால், அனைவரும் ஒருவரையொருவர் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம், அந்த வீட்டில் மாடியிலிருந்து ஏதோ ஒரு விநோத சத்தம் கேட்டது என்று சதீஷ் கூறினார். வீட்டிற்குள்ளிருந்த ஹரி(இன்னொரு டைரக்டர்), ஸ்ரீஜித் (அஸோஸியேட்), லோகேஷ்(அஸிஸ்டெண்ட்) அனைவரும் அவர்களுக்கும் அந்த சத்தம் கேட்டதாக ஒப்புக்கொண்டணர்.
இவர்கள் முகத்திலிருந்த மிரட்சியைப் பார்த்த எங்களுக்குள்ளும் ஒருவித பய உணர்வு ஊடுருவியது. மணி 12:30, வெகு நேரம் வரை செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தோம். முதல் வேலையாக வீட்டை விட்டு வெளியே வந்தோம். எங்களில் யார் யாருக்கு பேய் பயம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அந்த தருணம் மட்டும் எங்கள் அனைவருக்கும் பயம் இருந்தது உண்மைதான், யாரும்(எங்கள் குழுவில்) 'நான் பயப்படவில்லை' என்று மறுக்க முடியாது.அப்போதைக்கு எங்களுக்கு தெரிந்த ஒரே யோசனை, அங்கு வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த TAVERA வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டோம். அன்றைக்கு ஷூட்டிங் Cancel செய்துவிட்டு, நடந்தவற்றை மறப்பதற்காக சில ஜோக்ஸ் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு சிரித்து(?) கொண்டோம். அந்த நேரத்திற்கு அந்த Laughter Therapy நன்றாக வேலை செய்தது. ஆனாலும் வண்டிக்குள்ளிருந்து ஒருவருக்கொருவர் தெரியாமல் அந்த வீட்டை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.
1 comment:
hi neenga sonnathu romba interestinga irundhathu but neenga yenna satham nu madiyil poi parthirukkalam yennum yetavathu visayam kedichirukkalaam. nan solluradhu easy than irundhalum ataiyum therinjiirukkalam.
Post a Comment