
ஒரு வழியாக நாங்கள் நினைத்ததுபோல் இறந்த ஆன்மாவிடமிருந்து பாடல் வரிகள் எங்களுக்கு கிடைத்தது.
இந்த பாடல்வரிகளை எங்களது பாடல் இசையமைப்பாளர் சதீஷிடம் காட்டிய போது அவர் இந்த பாடலில் இருக்கும் தாளக்கட்டானது மிகவும் எளிதாக பாடல் வடிவமைக்க உதவுவதாகவும். மிகவும் அனுபவமுள்ள ஒரு பாடலாசிரியர் எழுதியதுபோல் இருக்கிறது என்றும் கூறி மகிழ்ந்தார்.
எங்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில் அக்டோபர் 22ஆம் தேதி நடந்தேறியது.

படத்தின் ஒரு டீஸர் டிரெய்லரையும், படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் போட்டு காட்டி சில தகவல்களை பத்திரிகை நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டோம். இந்த வலைப்பூவை ரெகுலராக படித்து வருபவர்களுக்கு அந்த தகவல்கள் ஒன்றும் புதுமையாக இராது, இருப்பினும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
* தமிழ் திரையுலகில் முதன்முறையாக மூன்று பேர் சேர்ந்து இயக்கிய படம்
* முழுக்க முழுக்க H.D. formatல் எடுக்கப்பட்ட படம்
* கதையின் முக்கிய காட்சிகளை மூணாறு மலைப்பகுதியில் உண்மையாக ஆவிகள் பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் பகுதியில் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது
* கத்தி, இரத்தம், அகோர உருவங்கள், காட்சியமைப்புகளில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், கதாநாயகன், கதாநாயகி, பாடல், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற வழக்கமான சினிமா ஃபார்மூலாவிலிருந்து சற்றே விலகி எடுக்கப்பட்ட முதல் திகில் படம்
* Paranormal Investigation எனப்படும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் என்ற புது professionஐ தமிழ் திரையில் அறிமுகப்படுத்தியுள்ள படம்.
* இப்படத்தில் நடிகர்கள், டெக்னிஷியன்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் உட்பட அனைவரும் புதுமுகங்கள்
* ஆவிகள், பேய்கள் உண்டா இல்லையா? என்ற கேள்விக்கு 'உண்டு', 'இல்லை' என்றற கூறும் இருதரப்பினரும் பார்க்க வேண்டிய படம்.

இதையெல்லாம் கூறிமுடிக்கும் வரை பத்திரிகை நண்பர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றையும்விட கண்ணதாசன் ஐயா அவர்களின் புண்ணிய ஆன்மாவை அழைத்து எழுதப்பட்ட பாடல் இதுதான் என்று பாடல்வரிகளை வெளியிட்டதும், அந்த வரிகளைப் பற்றியும் அந்த பாடலை நாங்கள் பெற்ற விதத்தை பற்றியும் எக்கச்சக்க கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதிலளித்து முடித்தோம்.
அடுத்த 2 நாட்களுக்கெல்லாம், இந்த செய்தி கிட்டத்தட்ட எல்லா நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணைய குழுமங்களிலும் சரமாரியாக பிரசுரிக்கப்பட்டன.
பத்திரிகைகளில் பிரசுரமான சில ஃபோட்டோக்களை அடுத்த போஸ்ட்டில் போடுகிறேன்.