மறுநாளிலிருந்தே லொகேஷன் வேட்டை நடத்த ஆரம்பித்தோம். முதலில் டோனி என்ற ஒருவர் லொகேஷன் மேனேஜராக வந்தார்... அவரிடம் ஆவி, பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என்றதும், மனிதன் குழம்பிப்போய்விட்டார். பாவம் எங்களுக்காக அவரும் அரும்பாடு பட்டு சில பல பழைய இடங்களை காட்டிக் கொண்டிருந்தார்... இப்படியே 2 நாட்கள் கழிந்தன, ஆனால் பயங்கரமான இடங்களாக எதுவும் மாட்டவில்லை... ஒரு கட்டத்தில் அவர் பின்வாங்கிக் கொள்ளவே, நிக்ஸன் என்றவர் தனக்கு தெரிந்த சில இடங்களை காட்டுவதாக கூறி எங்களை அழைத்து சென்றார்... இருந்தும் நாங்கள் பார்த்த சில இடங்களின் சலிப்புகள் காரணமாக பெரிதாய் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அவருடன் சென்றோம்...போதமேடு என்ற பகுதியில் அவர் காட்டிய முதல் இடமே நாங்கள் கதைக்காக எதிர்ப்பார்த்தது போலவே இருந்தது. ஆனால் நிகஸன், அந்த இடத்தில் உண்மையிலேயே சில அமானுஷ்யங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறினார். ஆஹா! இதுதானே நாங்கள் எதிர்ப்பார்த்து என்று கூறி, அந்த இடத்தை முடிவு செய்தோம். ஆனால் அந்த இடம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை, அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறவே, நாங்கள் ஒரு 4 நாட்கள் அந்த இடத்தில் ஷூட்டிங் பர்மிஷனுக்காக காத்திருந்தோம்...
இதற்கிடையே நிக்ஸன் அவர்கள் எங்களுக்கு வெவ்வேறு இடத்தை காட்டிக் கொண்டேடடட இருந்தார்... Dayக்கள் நகர்ந்ததுதான் மிச்சம், ம்... ஹூம்...எதுவும் எங்களுக்கு பிடிக்கவில்லை... 'மணந்தால் மஹாதேவி.. இல்லையேல் மரணதேவி' என்ற கதையாய், மிகவும் பிடிவாதமாக இருந்து அந்த இடத்திற்கான ஷூட்டிங் அனுமதியை ஒருவாறு பெற்றுக்கொண்டோம்.
தயாரிப்பாளர் முகத்திலும் எங்கள் அனைவர் முகத்திலும் இப்போதுதான் நிம்மதி.
ஆனால் அதே முகத்தில் சற்றே கலவரமும் கலந்திருந்தது, காரணம் நாங்கள் ஷூட் செய்யவேண்டிய காட்சிகள் அனைத்தும் இரவு நேரங்களில் படம்பிடிக்க படவேண்டியவை. ஆனால் அந்த வீட்டை பாரத்தால் பகலிலேயே பயங்கரமாக இருந்தது. இது போதாதென்று அப்பகுதியில் ஒரு சில மனிதர்களும், 'இங்கேயா படம் எடுக்கிறீங்க' என்று அந்த வீட்டைப் பற்றி பலப்பல கதைகள் கூறி எங்கள் பீதி(தீ)க்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டே இருந்தனர்.
'கிளம்பிட்டோம், வந்துட்டோம், எடுத்துட்டுதான் போனோம்' என்ற உறுதிமொழியை எங்கள் குழுவில் அனைவரும் எடுத்துக் கொண்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு, லொகேஷனில் (அந்த வீட்டில்) கால் பதித்தோம்.
'கிளம்பிட்டோம், வந்துட்டோம், எடுத்துட்டுதான் போனோம்' என்ற உறுதிமொழியை எங்கள் குழுவில் அனைவரும் எடுத்துக் கொண்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு, லொகேஷனில் (அந்த வீட்டில்) கால் பதித்தோம்.
1 comment:
Dir, you just rocks!!! these articles just prove your another talent(writing)...keep up the good work...expecting the film's release with much interest... - Raghu
Post a Comment