Wednesday, November 5, 2008

பேய்வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்...

நாகராஜ்அதற்கு அடுத்த நாள் நாங்கள் ஷூட்டிங்கிற்கு வர தயங்கியது உண்மைதான் ஆனால், அன்று இரவு, நாங்கள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை... ஷூட்டிங் சுமூகமாக நடந்தேறியது.

இதற்கிடையே ஒரு ஜாலியான விஷயமும் அந்த லொகேஷனில் நடந்தது, அது எங்கள் அஸிஸ்டெண்ட் டைரக்டர் நாகராஜின் பிறந்த நாள்.

Birthday Cakeபேய்வீட்டில் பிறந்த நாள் கொண்டாடியது இவர் கண்டிப்பாக தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். மேலும் எங்களுக்கு நிகழ்ந்த அந்த பயங்கர அனுபவத்தை மறக்கவும் இந்த பிறந்த நாள் வழிவகுத்தது.


Hari with Nagarajநாகராஜைப் பற்றி நாங்கள் சொல்லியே ஆக வேண்டும், அந்தளவுக்கு எங்களை(குழவை) ஒரு தாய் போல் கவனித்து கொண்டார். எங்களில் பலர் நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் எங்களை மிரட்டி சாப்பிட வைப்பார். மேலும் இப்படத்திற்காக ரிஸ்க் எடுத்தோர் வரிசையில் இவரும் ஒருவர். அடர்ந்த காடுகளில் மரத்தில் ஏறி எங்களுக்காக லைட் கட்டியது, அந்த வீட்டிற்கு ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்காமல் நாங்கள் கவலைப்பட்டிருந்த போது எங்களுக்காக மூணாறிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டது(அடுத்த நாளே பர்மிஷன் கிடைத்தது), மேலும் மழையிலும், கடும் குளிரிலும், மலைப்பிரதேசத்தில் வண்டி ஓட்டியது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தாயுமானவர் பட்டமளிப்பு விழா(சும்மா)

பேக்அப்-இன் போது ஒரு விஷயம் நடந்தது, அதை அடுத்த போஸ்டில் பார்ப்போம்... போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் காரணமாக blog-ஐ அடிக்கடி update செய்ய முடிவதில்லை... முடிந்தவரை சீக்கரம் update செய்து விடுகிறேன்...

2 comments:

Unknown said...

pei veetiln pirandha naal super. intha madhiri vazhkaiyila yellarukkum amaiyathu. Irra teamkku yennudaiya vazhthukkal.

ERAAAA
Director's Blog
said...

திரு. ராஜி,
நீங்கள் கூறியது உண்மைதான். பேய்வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய அந்த திகில் கலந்த சுவாரஸ்ய அனுபவத்தை எங்களாலும் மறக்கவே முடியாது. உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்