
போஸ்ட் புரொடக்ஷன் காரணமாக இந்த ப்ளாக்கை ரெகுலராக எழுத முடியாததற்கு மன்னிக்கவும்.
நாங்கள் சென்னைக்கு வந்தவரை கூறியிருந்தேன். சென்னையில் நாங்கள் வந்ததும், மூணாறில் ஷூட் செய்த காட்சிகளை எடிட்டிங்கிற்காக ஏற்றிவிட்டு, ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டோம். அது என்ன என்று கூறுவதற்கு முன்னால், இந்த படத்திற்க்காக நாங்கள் சந்தித்த முக்கியமான ஒரு நபரைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.
எங்கள் படத்திற்க்காக சில அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு ஒரு ஆவியுலக ஆராய்ச்சியாளரின் விளக்கம் தேவைப்பட்டது. அதற்க்காக நாங்கள் சந்தித்தது திரு. சி. எம். இரத்தினசாமி ஐயா அவர்களை. இவர் இனிஷியலில் இருக்கும் கம்பீரம் இவரை நேரில் பார்ப்பதிலும் இருக்கிறது. நம்மூரில் இவர் போல் உள்ளவர்கள் மிக சிலரே, உதாரணத்திற்கு திரு. விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் ஐயா அவர்களை கூறலாம். விக்கிரவாண்டி ஐயா அவர்களின் புத்தகங்களும் அவரது சேவைகளும் மிகவும் பிரசித்தம், குறிப்பாக இவர் நடத்தும் ஆவிகள் உலகம் ஒரு புதுமையான இதழ். இவரைப் போலவே இரத்தினசாமி ஐயா அவர்களும் இந்த துறையில் செயற்கறிய செயல்களை செய்து வருகிறார்.
சேகர் சார் (கிருஷ்ண சேகர்) கோயம்புத்தூரில் இருக்கும்போது இரத்தினசாமி ஐயா அவர்களைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார். இவர் பல தடங்கள்கலையும் மீறி இந்த துறையில் நுழைந்த அந்த ஆர்வம், மேலும் இவர் சிறுவயதில் ஒரு குழு அமைத்து மேற்கொண்ட அமானுஷ்ய ஆராய்ச்சிகள் இப்படி பல விஷயத்தை சேகர் சார் கூறினார், அதனால் நாங்கள் அம்பத்தூர் கனரா பாங்கிற்கு அருகில் இவரது திருமுருகன் ஆன்மீக மையத்தில் இவரை சந்தித்தோம். எங்களுக்கு ஆவிகள் பேய்கள் பற்றி இருந்த கண்ணோட்டத்தை பகிர்ந்து தெளிந்துக் கொண்டோம். இவரிடம் நாங்கள் சந்தித்து பேசிய தருணங்கள் எங்கள் திரைப்படத்தை நல்ல முறையில் நேர்த்தி செய்ய மிகவும் உதவியது. அவருக்கு எங்கள் குழு சார்பாக, இந்த வலைப்பூவின் வாயிலாக(வும்) நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரை சந்தித்ததன் மூலம் எங்கள் படத்திற்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. அந்த பொக்கிஷம் என்ன என்று அடுத்த போஸ்ட்டில் கூறுகிறேன்.
No comments:
Post a Comment